டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு;90 காலியிடங்கள் தேர்வெழுதும் 2.4 லட்சம் பேர்
Author: Sudha13 ஜூலை 2024, 8:20 காலை
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 1 குரூப் 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இருநிலைகளில் நடைபெறவுள்ளது. முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1,பணியிடம் என மொத்தம் 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டது.
இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு மையங்களில் நடைபெறுகிற உள்ளது.
0
0