என்கவுன்டர் என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை முதல்வர் தடுக்க வேண்டும் : PMT இசக்கி ராஜா!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 11:32 am

PMT மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை அதிகமாக உள்ளது குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது குற்றவாளிகள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள் அப்படி ஒரு ஆசாதாரணமான சூழ்நிலை தொடர்ந்து போய்க்கொண்டுள்ளது. இதனால் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த யாரும் இது குறித்து பேசவில்லை என்றார். தவறு செய்தவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் குரல் அளிக்கவில்லை என்றார். தொடர்ந்து முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மீது என்கவுண்டர் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். கை கால்கள் உடைக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறினார்.

சமுதாய மக்களின் மேன்மைக்காக கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், இது போன்ற மனித உரிமை மீறல்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர் மீதும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்தார். திருச்சியில் தேவர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் துரை என்பவரை போலி என்கவுண்டர் செய்துள்ளார்கள் என குற்றம்சாட்டிய அவர், என்கவுண்டர் செய்யப்பட்ட துரை மீது 57 வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு 57 வழக்குகள் உள்ள நிலையில் ஒரு வழக்கில் கூட அவருக்கு தண்டனை பெற்றுத் தர முடியவில்லை என்றால் பின்பு எதற்கு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்றார்.

துரை என்பவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை அப்படி இருக்கும் பொழுது நீங்கள் எப்படி குற்றவாளி எனக் கூறி சுடுகிறீர்கள் என தெரியவில்லை என்றார். எந்த சமூகத்தைச் சார்ந்தவர் தவறு செய்தாலும் சிறையில் அடையுங்கள், அவர்கள் திருந்தி விடுவார்கள். துரை மீது கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையினரால் அவரது காலில் சுடப்பட்டுள்ளது. அவரால் நடக்கவே முடியாதவர் அப்படி ஊனமுற்ற நபர் உங்களை எப்படி தாக்கி விட்டு ஓடினார் என்பது புரியவில்லை என்றார். தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு கொலை குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பது தெரிந்தும் அவரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் தலைமறைவான குற்றவாளி என கூறுகிறேர்கள் 2019 இல் நடந்த ஒரு வழக்கு சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் துரை மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விசாரணை இன்று வரவுள்ளது அப்படி இருக்கும் பொழுது அவர் எப்படி தலைமறைவான குற்றவாளி என கேள்வி எழுப்பினார்.

புதுக்கோட்டை ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்தையன் என்கவுண்டர் செய்ததாக கூறப்படுகிறது, புதுக்கோட்டை ஆலங்குடி காவல் நிலையத்தில் துரை என்பவருக்கு எந்தவிதமான வழக்குகளும் இல்லை என்றார் அப்படி இருக்கும் பொழுது இவர் எப்படி என் கவுண்டர் செய்தார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டார்.

இதை முழுமையாக நீதியரசர் விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை ஒரே சமூகத்தினருக்கிடையே நடைபெற்ற கொலை என்றார். இது போன்ற போலி என்கவுண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அவ்வாறு போலியன் கவுண்டர் என தெரிய வந்தால் அதை செய்த காவல்துறையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தென் மாவட்டங்களில் குற்றம் செய்யாத முக்குலத்தோர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களை தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளியாக்கி வருகின்றனர் என்றார்.

ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஐந்து முக்குலத்தோர்கள் சூட்டப்பட்டதால் இந்நாள் வரை காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் ஏற முடியாமல் உள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த நாங்கள் எதிராக உள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு எதிராக போராட வைத்து விடாதீர்கள் என்றார். காவல்துறையினருக்கு ஒரு வேண்டுகோள் வழக்கு உள்ளது என்று சொன்னால் எத்தனை எம்எல்ஏக்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளது அதையெல்லாம் எடுத்து பார்க்க வேண்டும் என்றார். சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் செல்வப் பெருந்தகை மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் மீதெல்லாம் 107 மற்றும் 110 கிடையாதா என்றார்.

திருச்சியில் ஆடு திருடியவர்களை பிடித்த காவல் ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அவர்கள் மீதெல்லாம் என்கவுண்டர் ஏன் செய்யவில்லை என குற்றம் சாட்டிய அவர், காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக நடத்துவதாக வருத்தமுடன் தெரிவித்தார்.

குற்றவாளிகள் கடுமையான முறையில் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் அதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது என்றார். இது போன்ற நடைபெறும் மனித உரிமை மீறல்களை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இது தொடரும் என்றால் தென் தமிழகத்தில் உள்ள முக்குலத்தோர் இன மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி திமுக ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 517

    0

    0