ரோசாப்பூ பாடல் புகழ் இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை; தனிமை காரணமா? அதிர்ச்சியில் திரையுலகம்,..

Author: Sudha
13 July 2024, 3:00 pm

இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ரவிஷங்கர்.சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

அந்த படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ என்ற பாடலையும் எழுதினார். இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனது.

மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். எல்லா பாடல்களும் ஹிட் அடித்தது.குறிப்பாக இதில் இடம் பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா? என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இன்று இயக்குனர் ரவி ஷங்கர்(63), சென்னையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வருஷமெல்ல்லாம் வசந்தம் திரைப்படத்திற்கு பின் ரவி ஷங்கர் வேறு படங்கள் எதையும் இயக்கவில்லை. திருமணமே செய்து கொள்ளாமல் சென்னை கே கே நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனிமை மற்றும் மன உளைச்சல் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu