கருத்து சுதந்திரத்தை பற்றி திமுகவுக்கு கற்றுத்தர வேண்டாம் : சீமானுக்கு அமைச்சர் அறிவுரை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 4:17 pm

மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். “பால்வளத்துறை நிலையான வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறது. அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கால்நடை தீவனம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால்களை விநியோகம் செய்வதற்கு புதிய நடைமுறைகள் திட்டமிடப்பட்ட வருகிறது.

ஆவினில் எவ்வித நிதி நெருக்கடி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மதுரை ஆவின் கடந்தாண்டு 4.5 கோடி ரூபாய் லாபம் ஈட்டுள்ளது. இந்தாண்டு இதைவிட அதிக லாபம் ஈட்டப்படும். பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த சீமானின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு,”ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரைப்பற்றி அளந்து பேச வேண்டும். இது ஆறு அறிவு உள்ளவர் பேசுபவது போல் இல்லை. சீமான் மீண்டும் ஒருமுறை பிறந்து வளர்ந்தால் கூட கலைஞர் கருணாநிதியின் செயலுக்கு ஈடாக முடியாது.

குறைந்தபட்ச மரியாதை உடன் சீமான் பேச வேண்டும். சீமான் போன்றவர்கள் இதுபோன்று பேசி தங்களது மரியாதையை இழக்கிறார்கள். சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது.

மேடையில் பேசும் போது வார்த்தையில் கவனத்துடன் பேச வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. கருத்து சுதந்திரத்தைப் பற்றி திமுகவிற்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்றார்

உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதல்வராவார் என்ற கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதற்குண்டான அனைத்து தகுதிகளும் கொண்டவர். அவர் எப்போது துணை முதல்வர் ஆவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்” என்றார்

  • Nayanthara disrespecting Allu Arjun viral video பிரபல தெலுங்கு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா..வைரலாகும் வீடியோ..தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்..!
  • Views: - 421

    0

    0