காலில் விழுந்த ரஜினி;தூக்கி விட்ட நண்பர்; அம்பானி இல்ல திருமணத்தில் நெகிழ்ச்சி,..

Author: Sudha
14 July 2024, 11:09 am

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது ஹாலிவுட் பிரபலங்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடனான அவரது உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலக ஜாம்பவான் அமிதாப் பச்சனுடன் பேசி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் அவரது காலில் விழுந்து வணங்க முயற்சிக்கிறார். அதனை தடுத்த அமிதாப் பச்சன் ரஜினிகாந்தை கட்டித் தழுவிக் கொண்டார். பின்னர் இருவரும் கைகுலுக்கி கொண்ட பின்னர் சிறிது நேரம் உரையாடுவதாக உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!