உண்மை குற்றவாளியை தப்பிக்க வைக்க திமுக அரங்கேற்றிய நாடகம் : என்கவுன்டர் குறித்து சீமான்!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2024, 12:11 pm

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம். விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம். உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காகவே விசாரணை கைதி திருவேங்கடம் கொலை. காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

  • Vijay surrenders to Sun TV… Jana Nayagan stuck திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!