லோகேஷ் இயக்கத்தில் கைதி2 ; LCU -வில் கமல், விஜய், சூர்யா; செம்ம நியூஸ்,..
Author: Sudha14 July 2024, 2:29 pm
ரஜினி நடிப்பில் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.
இந்த படத்தில் அவரது எல்சியு காட்சிகள் இடம் பெறாது என கூறப்படுகிறது.
திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் அதன் கதைகளத்தையும் மற்றொரு படங்களில் தொடர்வதுபோல் அமைப்பதை ‘யுனிவர்ஸ்’ எனக் குறிப்பிடுவார்கள். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்துதான் இந்த யுனிவர்ஸ் வரிசை முறை பலருக்கும் பரிச்சயமானது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் இந்த யுனிவர்ஸ் முறையை புஸ்கர்- காயத்ரியின் ‘ வ குவாட்டர் கட்டிங்’ திரைப்படத்திலும், தியாகராஜா குமாராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திலும் கண்டிருப்போம். புஸ்கர் காயத்ரியின் ‘ஓரம் போ’ திரைப்படத்தில் வரும் ஒரு ஆட்டோ தியாகராஜா குமாராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திலும் வரும்.
அதுமட்டுமின்றி ‘ஓரம் போ’ திரைப்படத்தின் சந்துரு கதாபாத்திரதில் ‘வ குவாட்டர் கட்டிங்’ திரைப்படத்திலும் கேமியோ செய்திருப்பார், ஆர்யா.
இதை லோகேஷ் கனகராஜும் ஒரு நேர்காணலில் மேற்கோள் காட்டியிருப்பார். இந்த யுனிவர்ஸ் முறையை அனைவருக்கும் புரியும் வண்ணத்தில் தனது திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து ‘ LCU – லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்கிற மாபெரும் பிராண்டை உருவாக்கியிருக்கிறார், லோகேஷ் கனகராஜ். ஆனால், இந்த யுனிவர்ஸுக்கு பெயரிட்டது ரசிகர்கள்தான்.
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் ‘ ( Lokesh Cinematic Universe) என்பதைச் சுருக்கமாக ‘LCU’ என பெயர் வைத்து ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். இந்த யுனிவர்ஸுக்கு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம்தான் தொடக்கமாக அமைந்தது. அவர் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம்தான் இந்த யுனிவர்ஸுக்கு தொடக்கமாக அமைந்தது.
கூலி படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் அவர் இயக்கப் போகும் கைதி 2 படத்தில் எல்சியு காட்சிகள் இடம் பெறுகிறது. குறிப்பாக விக்ரம் பட கேரக்டரில் கமல்ஹாசனும், ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யாவும் நடிப்பதோடு, விஜய்யின் லியோ பட கேரக்டரும் வாய்ஸ் ஓவராக இப்படத்தில் இடம் பெறும் என்கிறார்கள்.
கூலி படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த ஆண்டு கைதி-2 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.