மீண்டும் ராடுமேன் கும்பல்? கோவையில் பீதியை கிளப்பும் கொள்ளையர்கள் : கதவை உடைத்து கொள்ளை முயற்சி!
Author: Udayachandran RadhaKrishnan14 ஜூலை 2024, 5:46 மணி
கோவையில் சமீபத்தில் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த “ராடுமேன்” கும்பலை போலீசார் பிடித்த நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்க்குள் மீண்டும் அதே பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் கோவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைகு உட்பட்ட ஆவராம்பாளையம் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து உள்ளான். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்த போது சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளனர். இதனால் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மின் விளக்குகளை ஆன் செய்ததும் அங்கு இருந்து கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
வளர்ந்து வரும் நவீன உலகில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி
அடுத்து, அடுத்து அரங்கேறும் கொள்ளை சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த உள்ள கோவை வாசிகள்….
0
0