மழைநீர் வடிகால் பணியின் போது தோண்ட தோண்ட கிடைத்த புதையல்.. ஆச்சரியத்தில் மக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2024, 8:26 pm
கேரள மாநிலம் கண்ணூர் ஸ்ரீ கண்டாயபுரம் செங்களாய் என்ற ஊரில் ரப்பர் தோட்டத்தில் பெண்கள் மழை நீர் வாய்க்கால் தோன்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்
அப்போது ஒரு இரண்டு அடி ஆழம் தோன்றிய போது ஒரு மர்ம பொருள் தென்பட்டது ஆனால் பயத்தில் அதை தூக்கி வீசிவிட்டு பணி முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
மறந்து வைத்து வந்த குடையை எடுக்க செல்லும் பொழுது தூக்கி எறிந்த கொடுமைக்குள் இருந்து தங்கம் மின்னுவது போல தெரிந்திருக்கிறது.
இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திய பிறகு அந்தக் குடுவை உடைத்து பார்த்த பொழுது அதில் சில தங்க ஆபரண பொருட்களும் வெள்ளி காசுகளும் இருந்துள்ளது.
இதை உடனடியாக அறிந்து இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மீண்டும் அதன் அருகே ஒரு குழி தோண்டும் பொழுது அந்த இடத்தில் இருந்தும் புதையல் கிடைத்திருக்கிறது
அதை திறந்து பார்த்த பொழுதும் தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி காசுகள் கிடைத்துள்ளது இது குறித்து கேரள தொல்லியல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
அவர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கண்ணூரில் புதையல் கிடைத்த பகுதிக்கு சென்று கிடைத்துள்ள புதையல்களை ஆய்வு செய்த பிறகு இதனுடைய பழமை குறித்து தெரியவரும் தற்போது புதையல் கிடைத்த பகுதியை பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர்
கண்ணூர் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தொண்டும் பொழுது புதையல் கிடைத்தது பெரும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.