அம்பானி இல்ல திருமணத்தில் உறுதியான 2 விவாகரத்து 1 பிரேக் அப்; ரசிகர்கள் அதிர்ச்சி,.

Author: Sudha
15 July 2024, 11:47 am

அம்பானி இல்ல திருமணம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.பல சுவாரஸ்யங்கள் அரங்கேறியது.

திருமணத்திற்கு ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஜோடியாக வந்து கலந்து கொண்டனர்.சில பிரபலங்கள் தனியே வந்து கலந்து கொண்டது அவர்களின் பிரிவை உறுதி செய்வதாக இருக்கிறது என ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

அந்த வகையில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித் தனியாக வந்து திருமண விழாவில் பங்கேற்றனர்.அபிஷேக் தன்னுடைய அப்பா அம்மா சகோதரியுடன் வந்து கலந்து கொண்டார்.ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் வந்து திருமண நிகழ்வில் பங்கேற்றார்.ஏற்கனவே இவர்கள் பிரிந்து விட்டதாக திரைத்துறையில் பேசப்படுகிறது. தனித்தனியாக இவர்கள் வந்தது பிரிவை உறுதி செய்வதாக ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.

அடுத்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இவர் தன்னுடைய மனைவி நடாஷா ஸ்டோன்கோவிக்கை பிரிய இருப்பதாக ஏற்கனவே ஒரு வதந்தி எழுந்தது. அதை உறுதி செய்யும் விதமாக திருமண நிகழ்வில் ஹர்திக் பாண்டியா தனியாக வந்து கலந்து கொண்டது இவர்களது பிரிவை உறுதி செய்வதாக இருந்தது.

அடுத்ததாக பாலிவுட் ஹீரோ ஹிருத்திக் ரோஷன் எப்போது எங்கே சென்றாலும் தன்னுடைய காதலியான சபா ஆசாத் உடன் செல்வது அவருடைய வழக்கம். இந்த திருமண விழாவில் இவர் தனியே கலந்து கொண்டது இவர்களின் இருவரின் பிரிவை சொல்வதாக இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 140

    0

    0