ஊரை விட்டே ஓடிப் போலான்னு நெனச்சேன்; கதறி அழுத பார்த்திபன்;ஷாக் ஆன ரசிகர்கள்

Author: Sudha
15 July 2024, 12:14 pm

பார்த்திபன் இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்துள்ள ‛டீன்ஸ்’ படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வந்தது.திரில்லர் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியாகி உள்ள இந்த படத்திற்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. டீன்ஸ் திரைப்படம் குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார் பார்த்திபன்.

அதில், ‛‛நண்பர்களே… சத்தியமா சொல்றேன் TEENZ-க்கு(டீன்ஸ்) உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த, உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு சயின்ஸ் பிக்ஷன் மற்றும் பேண்டஸி எண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும், கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்”.

நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

இன்னும் ஒரு பதிவில்

நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்!
என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது!
நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள்
டிக்கட்டே இல்லை.
எத்தனை screens? எவ்வளவு collections ?
இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை.போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.
கோடிகளை என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை.
பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது.
தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…