சிறுமி கடத்தல் வழக்கில் திருப்பம்.. சேலம் சிறுவனுடன் பைக்கில் மாயம் ; போக்சோ வழக்காக மாற்றிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 1:25 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் 16-வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார் கழிந்த பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வியடைந்த அவர் திங்கள்நகர் பகுதியில் உள்ள டுட்டோரியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார்

வீட்டில் தனியாக இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் பொழுதை கழிந்து வந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்கள் பழக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கழிந்த திங்களன்று காலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை காணாது அதிர்ச்சியடைந்த தந்தை வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக்கும் மாயமாகியிருந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அந்த பகுதியில் வந்த சிறுவன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை உருட்டி செல்வதும் சில மணி நேரம் கழித்து அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது அதே வேளையில் சிறுமி பயன்படுத்தும் செல்போண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது இதனையடுத்து போலீசார் சிறுமி கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்

சிறுமியின் இன்ஸ்டாகிராம் நண்பர்களான 4-இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தியும் சிறுமி குறித்த எந்த தகவலும் இல்லை நாட்கள் கடந்ததால் சிறுமியை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணையில் சிறுமியின் செல்ஃபோன் சேலத்தில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது

இதனையடுத்து வெள்ளிக்கிழமை சேலத்திற்கு பறந்த தனிப்படை போலீசார் டவர் லொக்கேஷன் மூலம் சேலம் சங்ககிரி கிராமத்தில் உள்ள வீட்டில் பதுங்கிய இன்ஸ்டா ஜோடியை மீட்டு ஞாயிற்றுகிழமை குளச்சல் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்
கழிந்த 2-மாதத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் சேலத்தை சேர்ந்த 17-வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டதும் அவரை காதலித்து வந்த சிறுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுவனை சேலத்தில் இருந்து குளச்சலுக்கு வருமாறும் கூறியுள்ளார்

திட்டமிட்டபடி சிறுவனும் தனது இன்ஸ்டாகிராம் காதலியை கரம் பிடிக்க 7-ம் தேதி சேலத்தில் இருந்து குளச்சலுக்கு வந்துள்ளார்

காலையிலேயே வந்த அந்த சிறுவனுக்கு சிறுமி தனது வீட்டிற்கு வரும் வழி வீடு இருக்கும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் மூலம் கூகுள் லொக்கேஷனையும் அனுப்பியுள்ளார்.

சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் இருந்து அவரது தந்தையின் பைக் சாவியை பெற்று வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரை பைக்கில் ஏற்றி சேலத்திற்கு சென்றுள்ளார்

மேலும் சேலந்திற்கு சென்ற அந்த இன்ஸ்டா ஜோடி சேலம் சங்ககிரி கிராமத்தில் உள்ள சிறுவனின் சித்தி வீட்டில் அடைக்கலம் புகுந்து குடும்பம் நடத்தி வந்தது.

குளச்சல் காவல் நிலையம் கொண்டு வந்த குளச்சல் மகளிர் போலீஸார் போலீஸார்
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
போலீசார் சிறுமி கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த சிறுமி அதிகாலை சிறுவனுடன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி உள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 575

    0

    0