மதுரையில் 3ஆம் இடம் ஏன்? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 4:03 pm

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது திருவருவுச் சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக சார்பில் 121வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகவும், கீழவாசல் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை பராமரிக்காமல் இருந்ததை அதிமுக ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் 5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது என்றார்.

சர்ச்சை ஆடியோ குறித்த கேள்விக்கு.?

அந்த ஆடியோ குறித்து எனக்கு ஏதும் தெரியாது. நேற்று ஒரு வேலையாக நான் வெளியில் இருந்ததால் அது குறித்து எனக்கு தெரியாது. அது என்னவென்று கேட்ட பிறகு அதுகுறித்து பேசுகிறேன் என்றார்.

பெருந்தலைவர் ஆட்சியை கொடுக்கும் ஆட்சி திமுக தான் என கூறியது குறித்த கேள்விக்கு.?

சட்டஒழுங்கு சீர்கெட்டுள்ளது., எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.? சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்பொழுது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு EVKS இளங்கோவன் கூறிகிறார் திமுகவை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என இது எந்த விதத்தில் நியாயம்.? என கேள்விஎழுப்பினர்.

பெருந்தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.! இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான் என கூறினார். அதிமுக ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

மதுரையில் 3ஆம் இடம் பெற்றது தான் குற்றச்சாட்டு என செய்தியாளர் கேள்விக்கு.?

வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம்.! ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.?குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர் இதில் அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இது குறித்தும் ஆடியோ குறித்தும் பொது செயலாளர் எதுவும் கூறவில்லை ஆலோசனைதான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் சௌராஷ்டிரா அமைப்பினர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வட மாநிலத்தவர்கள், பிராமின்ஸ் உள்ளிட்டோர் மோடிக்கு வாக்களித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில்தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 288

    0

    0