கட்டித் தழுவி முத்தமிட்ட ரசிகை; அன்பால் குளிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்,.

Author: Sudha
16 July 2024, 12:09 pm

தனியார் சேனல் ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மானை சந்திக்க வந்தார் வயது முதிர்ந்த ரசிகை ஒருவர்.தன் பெயர் சரளா எனவும் ஏ ஆர் ரகுமானின் தந்தை ஆர்.கே சேகர் அவர்களின் இசைக்குழுவில் பணியாற்றி இருப்பதாகவும் நிறைய பாடல்கள் பாடி இருப்பதாகவும் சொன்னார்.

அவரை நினைத்திருக்கிறதா என தொகுப்பாளர் கேட்ட போது நிச்சயமாக நினைவுள்ளது என்றார் ஏ ஆர் ரஹ்மான்.

அவர் ஏ ஆர் ரஹ்மானிடம் உங்களை உங்களை பார்ப்பதற்காகத் தான் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்தேன்.உங்களை பார்த்தது மிக மகிழ்ச்சி எனக் கூறி ஏ ஆர் ரகுமானை கட்டித் தழுவி முத்தமிட்டார். இதை கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது.

ஏ ஆர் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் ஒரு முக்கிய தமிழ் இசையமைப்பாளர், இசைத்துறையில் புகழ் பெற்றவர்.அவர் நிறைய மலையாளத் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது அவரது தந்தை சேகர் காலமானார்.மேலும் 11 வயது முதல் தன் குடும்பத்தை ஆதரிக்க பியானோ வாசிக்க ஆரம்பித்தார் ஏ ஆர் ரஹ்மான். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.ஆனால் அவரது இசைத்திறமை ஆக்ஸ்போர்டில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படிப்பதற்கான உதவித்தொகைக்கு வழிவகுத்தது, அங்கு அவர் மேற்கத்திய பாரம்பரிய இசையில் பட்டம் பெற்றார்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!