நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது.
இதன் இரண்டாம் பாகம் சர்தார் 2 என்ற பெயரில் வெளிவர உள்ளது. சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.இந்த புகைப்படத்தை படக்குழு நேற்று வெளியிட்டது.
சர்தார் 2 படத்தில் புதிதாக நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு இன்று தெரிவித்துள்ளது.
அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.