வேலூர் புதுமண தம்பதி வீட்டில் 10.5 சவரன் நகை திருட்டு;போலீசார் விசாரணை,..

Author: Sudha
16 ஜூலை 2024, 4:36 மணி
Quick Share

வேலூர் அடுத்த ஓசூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் இவர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சரண்யா இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது

இந்த நிலையில் ராமராஜ் ஆடி மாதம் துவங்கியதை அடுத்து தன் மனைவியை அழைத்து கொண்டு அமிர்தி அருகே நஞ்சு கொண்டபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் விட்டு விட்டு வருவதற்காக நேற்று திங்கட்கிழமை சென்றுள்ளார்.

வழக்கம் போல் இன்று காலை ராமராஜ் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவும் உடைக்கப்பட்டு நகை பெட்டியில் இருந்த 10.5 சவரன் தங்க நகை 250 கிராம் வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

தூக்கிச் சென்ற நகைப்பெட்டியை தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்குள்ள பகுதியில் விவசாய நிலம் அருகே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த அரியூர் போலீசார் இந்த திருட்டு சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்
  • Views: - 198

    0

    0