ஹைதராபாத்தில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை; தரும அடி கொடுத்த பெற்றோர்; நடன ஆசிரியர் போலீசில் ஒப்படைப்பு

Author: Sudha
16 July 2024, 6:29 pm

ஹைதராபாத் போடுப்பல் பகுதியில் உள்ள கிரண் இன்டர்நேஷனல் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியருக்கு தரும அடி கொடுத்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

போடுப்பல் பகுதியில் கிரண் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.அந்த பள்ளியில் நடன ஆசிரியராக வேலை செய்து வரும் நபர் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற அந்த மாணவி இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஏன் என்று பெற்றோர் விசாரித்தபோது நாட்டியம் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் நடன ஆசிரியர் தொடக்கூடாத பகுதிகளை தொட்டு தொல்லை கொடுக்கிறார் என்று அந்த மாணவி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பள்ளிக்குச் சென்று நடன ஆசிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

நடன ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடை பெற்று வருகிறது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!