மிரட்ட இருக்கும் நயன்தாரா; இரட்டை வேடம் காட்டிய சக்சஸ் கூட்டணி;

Author: Sudha
17 July 2024, 10:55 am

கடந்த 2019ம் ஆண்டில் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஐரா’. பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்லும் ஒரு இளம் பெண், அந்த இடத்தில் ஏதோ இயற்கைக்கு மாறான தன்மை இருப்பதை உணர்கிறாள். அதே நேரம் சென்னையில் மர்ம கொலைகள் நடக்கிறது.

தொடர் கொலைகளுக்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க நினைத்த நயன்தாராவிற்கு கிடைக்கும் அதிர்ச்சியே ஐரா திரைப்படத்தின் மையக்கருவாக இருந்தது.ஐரா திரைப்படத்தில் 2 வேடங்களில் நடித்திருந்தார் நயன்தாரா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐரா பட இயக்குனர் கே.எம்.சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படமானது திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் கதையில் உருவாகிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்