அந்த விஷயத்தை சொல்லி.. மோசமான அனுபவங்கள் குறித்து நடிகை ரித்விகா எமோஷனல்..!

Author: Vignesh
17 July 2024, 11:07 am

நடிகை ரித்விகா ( Riythvika )ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தமிழில் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “பரதேசி” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் . அதன் பின் கார்த்தி நடித்த “மெட்ராஸ்” படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் “கபாலி”,” இருமுகன்”, “சிகை” என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். தற்போது, போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ரித்விகா, அரைகுறை உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவ்வப்போது மாடர்ன் உடை மற்றும் சேலையில் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.

Riythvika

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை ரித்விகா சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பறிப்போனது. நேரடியாகவே சிலர் நாங்கள் இந்த படத்திற்கு கலராக இருக்கும் பெண்களை தேடுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அந்த படம் வெளிவந்த பின்னர் அந்த நடிகை கலராக இருப்பார். ஆனால், அவர்களையும் கலர் கம்மியாக காட்டி நடிக்க வைத்திருப்பார்கள். அப்போ எனக்கு மனசு வலிக்கும் என்று எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 145

    0

    0