‘ஒரு கோடிப்பே…’ விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ள மௌன ராகம் 2 சீரியல் நடிகை..!

Author: Vignesh
17 July 2024, 2:03 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மௌன ராகம். விஜய் டிவியில் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மௌனராகம் தொடர் மௌனராகம் 2 என்று இரண்டு சீசன்களாக ஒளிபரப்பப்பட்டது. முதல் பாகத்தில், அப்பா யார் என்று தேடி அலையும் ஒரு சிறுமியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பப்பட்டது. முதல் சீசன் முடிவுக்கு வர கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டில் புதுமுக நடிகர்களுடன் தொடங்கியது. ரவீனா, சல்மானுள், ராகுல், ஷில்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மௌனராகம் 2, 517 எபிசோடுகளுடன் இரண்டாம் பாகமும் முடிந்தது. இந்த மௌன ராகம் 2 வில் சக்தி அம்மாவாக நடித்து வந்த சிப்பி ரெஞ்சித் இவர் இந்த தொடரின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

car

மலையாள படங்களில் முன்னணி நாயகியாக 90களில் கலக்கி வந்த இவர் தற்போது, தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சிப்பி ரூ. 1 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். தனது கணவர் மற்றும் மகளுடன் புதிய கார் முன் அவர் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 239

    0

    0