வசூல் பற்றி நான் பேச மாட்டேன்; கல்கி பற்றிய கமல் கருத்து; வில்லன் ஆவாரா கமல்?

Author: Sudha
17 July 2024, 3:17 pm

இயக்குனர் உளியை கொண்டு வந்தார், நான் சுத்தியலை கொண்டு வந்தேன். நாங்கள் சேர்ந்து கல்கி என்ற உருவத்தை வடித்தோம். இந்தப் படத்தில் நான் சிறிது நேரம் மட்டுமே வருகிறேன் என்று ரசிகர்கள் சொன்னார்கள் . ஆனால் நான் எனக்கு கொடுக்கப்பட்ட கெட்டப்பை மட்டுமே பார்த்தேன். எனக்கு பிடிக்காமல் இருந்திருந்தால் எப்போதோ நான் அதிலிருந்து விலகி இருப்பேன்.

இந்தியாவின் சில பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இயக்குனர் நாக் அஷ்வினுக்கு சிங்கீதம் சீனிவாசராவ் போலவே குழந்தை மனம் உள்ளது.அந்த குழந்தை மனதை வளர்க்க வேண்டும். இரண்டாம் பாகத்தில் என் கதாபாத்திரமான யாஷ்கினின் செயல்களை நீங்கள் பார்க்கலாம்.

படத்தின் வசூல் பற்றி நான் பேசப்போவதில்லை, மகிழ்ச்சி பற்றி பேச விரும்புகிறேன். கல்கியால் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம், அதைக் கொண்டாடுகிறோம், தயவு செய்து எங்களுடன் நீங்களும் கொண்டாடுங்கள்,” என்று பேசியுள்ளார் கமல்.

இதுவரை 250 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். அதுல ஒண்ணு ரெண்டு மோசமா இருக்கும். ஆனால், இந்தப் படம் மாதிரி எந்த படத்திற்கும் ஒரு ‘அட்டென்ஷன்’ கிடைச்சதில்ல. இப்போ கிடைக்கும் போது அதை கண்டிப்பா கொண்டாடணும்.

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், கமல் மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?