சொகுசு கார் ஓட்டிய +2 மாணவன்.. தடுப்பில் மோதி இளைஞர் பலி : பெற்றோர்கள் மீது ஆக்ஷன்!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2024, 7:02 pm
கோவை மாநகர காவல் ஆணையாளர் சார்பில் ஆணையர் அலுவலகத்தில் Nancy Untold Story என்ற குறும்படத்தை கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்த குறும்படமானது பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர் ஏற்படுத்தவும் அதனை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்த குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மேலும் இந்த குறும்படம் ஒரு உண்மை சம்பவத்தை குறிப்பிட்டு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.இந்த குறும்படம் வெளியிட்டு விழாவில் வடக்கு ஆணையர் ஸ்டாலின்,தெற்கு ஆணையர் சரவணன் மற்றும் கோவை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்:- பொது மக்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு செய்து வருவதாகவும் மேலும் பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து வரும் நிலையில் தற்போது போக்குவரத்து உறுப்பினர் அதிக அளவில் ஏற்படுவதற்காக இந்த குறும்படம் வெளியிட்டதாக தெரிவித்தார்.
இந்த நான்சி குறும்படம் உண்மை சம்பவத்தை குறித்தும் பொது மக்களுக்கு அழுத்தமான செய்தியை வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டு காவல்துறை வலைதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்று கூறினார்.
பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட்ட இணைந்தும் நான்கு சக்கர வாகனத்தை செல்லும் போது சீட் பெல்ட் அனைத்தும் கட்டாயமாக செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பீளமேடு பகுதியில் 17 வயது சிறுவன் நான்கு சக்கர வாகனத்தை இயக்கியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேலும் அந்த கார் தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்து விட்டதாகவும சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
18 பூர்த்தியானாலும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.அவிநாசி சாலையில் Speed Camera பொருத்தப்பட்டுள்ளது எனவும் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அவர்கள் வாகனத்திற்கு அபதாரம் விதித்தும் பறிமுதல் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இரவு நேரங்களில் அதிக அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
ராடுமேன் குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் மீது தமிழகம் முழுவதும் 73 வழக்குகள் உள்ளது என்றும் அதில் 3 பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர் என்றும் அவர்களை விசாரணை செய்து வருவதாகவும் கூறினார்.
மேலும் அவர்கள் 1500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் அதனை ஆராய்ந்து அவர்கள் அந்த பணத்தை என்ன செய்தார்கள் என்று குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
காவல்துறையின் சேரும்போது காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் மேலும் அவர்களுக்கு தற்பொழுது புதிதாக பயிற்சி அளித்துள்ளதாகவும் மேலும் அவர்கள் எந்த சூழ்நிலையில் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளித்து வருவதாக கூறினார்.
மேலும் கொலை,கொள்ளை சம்பவம் குறித்த ரவுடிகளை கண்காணித்து வருவதாகவும் மேலும் ரவுடிகள் குறித்து காவலன் செயலில் பட்டியல் வெளியீட்டு அதனை ரோந்து பணியில் மேற்கொள்ளும் போலீசார் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் சரித்திர குற்றவழக்கு உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் ரவுடிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறினார்.