பெண்களும் ரவுடிகளாகிவிட்டனர்.. எல்லா கட்சிகளிலும் ரவுடிகள் உள்ளனர் : கார்த்தி சிதம்பரம் வேதனை!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2024, 2:49 pm
சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 8 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியலில் ரவுடிகள் புகுந்ததால்தான் கொலை போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
எல்லா கட்சியிலும் ரௌடிகள் புகுந்துள்ளனர். பெண்களும் ரௌடிகளாகியுள்ளனர் என்பது சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது.
சாதாரண சமுதாயத்தை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்கள் தான் அதிக அளவில் சுடப்படுகிறார்கள்.
பல உண்மைகள் வெளி வராமல் தடுப்பதற்காக கூட என்கவுண்டர் நடக்தப்படுகிறதா? என்ற சந்தேகம் வருகிறது என்றவர், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பழைய பகையாகவோ, அல்லது பழைய விரோதமாகவோ இருக்கலாம்?அரசியல் காரணத்திற்காக என கூற முடியாது என்றார். மேலும்,மின் கட்டண உயர்வு தேவை இல்லாதது.
மக்களின் மேல் பாரத்தை சுமத்தி இருக்கக் கூடாது என்ற கார்த்தி சிதம்பரம், கட்சியில் புதிதாக சேர்ப்பவர்கள்,பதவி கொடுக்கப்படுவர்களின் பின்னணி குறித்து கட்சி மேலிடம் ஆலோசிக்க வேண்டும் என்றார்.
எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களுக்கு காவல்துறை எதுவும் செய்ய முடியாது.ஆனால்,
கூலிப்படையினரை தடுக்க காவல்துறையினரால் முடியும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.