எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்; வெறும் 21 நாள்; மேடி பகிர்ந்த ஸ்லிம் சீக்ரெட்..

Author: Sudha
19 July 2024, 3:25 pm

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து தமிழ் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் நடிகராக மாறியவர் மாதவன்.தமிழ் சினிமாவின் அழகான நடிகர்களில் ஒருவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.அலைபாயுதே திரைப்படம் வெளியான சமயத்தில் கல்லூரி பெண்களின் கனவு ஹீரோவாக மாறினார்.

மாதவன் ஒரு நடிகர் மட்டுமல்ல,எழுத்தாளர், படத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை உடையவர். 4 தென்னிந்திய திரைப்பட விருதுகள்,மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் மாதவன்.

அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார் இவரை அறிமுகம் செய்தவர் இந்தியாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம்.பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் மின்னலே திரைப்படத்தில் நடித்தார். நடிகர் மாதவனுக்கு தற்போது 54 வயதாகிறது.இன்னும் தன் உடலை இளமையாக கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார்.தற்போது x வலைதளத்தில் தன்னுடைய ஸ்லிம் சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் மாதவன்.

இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங், உணவை நன்றாக மென்று உண்ணுதல், மாலை 6:45 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுதல், ஆழ்ந்த உறக்கம், தூங்கப் போகும் ஒரு மணி நேரத்திற்கும் முன்பு மொபைலை பயன்படுத்தாமல் இருப்பது,நிறைய தண்ணீர் குடிப்பது நிறைய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது போன்றவை உடலில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும். நான் பெரிய உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை ஆனாலும் கூட நல்ல உணவு உடம்பில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் உணர முடிகிறது வெறும் 21 நாட்களில் இந்த ஒரு மாற்றம் என் உடலில் ஏற்பட்டது என தன்னுடைய சீக்ரட்டை பகிர்ந்துள்ளார் மாதவன்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 151

    0

    0