இதுக்கு பேரு தான் விடியல் ஆட்சியா? திமுக அரசை வறுத்தெடுத்த பாஜகவின் இராமஸ்ரீனிவாசன்!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 5:05 pm

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 11 ஆண்டு நினைவஞ்சலி சேலம் மறவனேரி பகுதியில் அவரது இல்லம் அருகே நடைபெற்றது மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான ராம சீனிவாசன், துணைத் தலைவர் கே பி ராமலிங்கம், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளரும், பேராசிரியருமான ராம சீனிவாசன் செய்தியாளிடம் கூறும் போது, தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கடந்த 90 ஆம் ஆண்டு முதல் இந்துத்துவா தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

1980 ஆம் ராமகோபால் மதுரை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார் கடந்த 90 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்துத்துவா தலைவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் அச்சுறுத்தியும் கொலை செய்து வருகின்றனர்

இதுவரை 140 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் அந்த வகையில் பயங்கரவாதிகளால் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும், ஆடிட்டர் ரமேஷ் மென்மையான தலைவர் சேலம் மாநகரின் மக்களின் சொத்து தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்.

மாநகரில் ஆடிட்டர் ரமேஷ் பெயரில் சாலையோ, பூங்காவோ, அல்லது மேம்பாலத்திற்கோ அவர் நினைவாக பெயர் வைக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு மத்திய அரசுதான் காரணம் என்று கூறி வருகின்றனர் ஆனால் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதாகவே உள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் தான் கொலை கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் எட்டரை லட்சம் கோடி இது வரை கடன் உள்ளது. என்றும் ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது தமிழகத்தில் கடன் சுமையால் தமிழகத்தில் மின் கட்டணம் தொழில்வரி வீட்டு வரி உட்பட பல்வேறு வரிகளை தமிழக அரசு உயர்த்தி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷனும் வழங்குவதில்லை ஆனால் தேர்தல் வந்தால் கோடி கோடியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் உள்ளது

தமிழகத்தின் கடனிலும் முதன்மை மாநிலம் ஆகவும், போதையிலும் முதன்மை மாநிலம் ஆகவும் தமிழகம் உள்ளது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தான் விடியல் ஆட்சி என்று பெயரா போதைப் பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக எங்கும் கிடைக்கிறது சாராயம் என்பது பழைய போதை பொருள் தற்போது புதிய போதை பொருளுக்கு மக்களுக்கு மாறிவிட்டனர் கள்ளச்சாராயத்தால் 65 பேர் கள்ளக்குறிச்சியில் இறந்தனர் அதைப்பற்றி நடிகர் சூர்யா கோமான் உட்பட யாரும் பேச முன் வரவில்லை

ஸ்டாலின் மகனை முதல்வர் ஆக்கி குடும்ப சொத்து அடுத்த தலைமுறைக்கு செல்கிறது தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் ஈடுபட்டு வருகிறது

கேந்திரா வித்யாலயா பள்ளி அமைக்க மாநில அரசு அனுமதி மறுத்து வருகிறது ஆனால் மத்திய அரசு எந்த மாநிலங்கள் வேண்டும் என்றாலும் உரிமை உள்ளது அதேபோல மாநில அரசுக்கும் பள்ளிகள் திறக்க உரிமை உள்ளது தொடர்ந்து இதேபோல மோதல் போக்கு ஈடுபட்டால் மத்திய அரசு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யும் என தெரிவித்தார்

  • big boss balaji new movie news பல பெண்களை ஏமாற்றிய பிக் பாஸ் பாலாஜி..சரமாரியாக தாக்கிய பெண் ஆட்டோ டிரைவர்..!
  • Views: - 272

    0

    0