நீட் இல்லாமலே டாக்டர் ஆகலாம்; போலி விளம்பரம்!வழக்கறிஞர் புகார்

Author: Sudha
20 July 2024, 9:17 am

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் கே.எஸ்.ஜி அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப்
மெடிசன் என்ற நிறுவனம் மாணவர்களை நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ப்பதாக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்கள் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்த மாணவர்களின் சார்பில் வழக்கறிஞர் ஜான்லி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

நீட் இல்லாமல் மருத்துவ படிப்பில் சேர இங்கு மூன்று ஆண்டுகளும், அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளும் பயிற்சி அளிக்கபடும் எனக்கூறி 40 முதல் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் இந்த நிறுவனம் ஏமாற்றி பணம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து ஏற்கனவே 2021-ம் ஆண்டு ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக கோவை மாநகர குற்றவியல் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளோம் என சொன்னார்.

குறிப்பாக கிராமப்புற மாணவர்களை குறி வைத்து ஏமாற்றி மாணவர்களிடம் இருந்து 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளதாகவும் இதில் ஆரம்பத்தில் 5 முதல் 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆசையை தூண்டும் விதமாக விளம்பரம் செய்து கவர்ந்துள்ளனர் மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கித் தருவதாக கடந்த ஐந்தாண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர் என புகார் அளித்துள்ளார்.

  • thalapathy 69 is telugu movie remake தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
  • Views: - 189

    0

    0