எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர். தற்போது எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
உலகத் தலைவர்களில் அதிக மக்களால் ஃபாலோ செய்யப்படும் தலைவராக மோடி அவர்கள் இருக்கிறார்,அதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் 100.2 மில்லியன் மக்கள் பாரதப் பிரதமர் மோடியை ஃபாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.