விக்ரமுடன் மோத தயாரான பிரசாந்த்.. சபாஷ் சரியான போட்டி..!

Author: Vignesh
20 July 2024, 10:53 am

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவரது தந்தை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவர். தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து செம்பருத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் திசை திருப்பினார்.

மேலும் படிக்க: அட சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே Adjustment பண்ண சொல்றாங்க.. பொன்னி சீரியல் நடிகை பகீர்..!

தொடர்ந்து ஜீன்ஸ், ஜோடி, வின்னர் , லண்டன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார். ஈர்த்து வாழ்க்கையையே காலி செய்தது அவரது திருமண வாழ்க்கை தான். ஆம், பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

50 வயதாகும் பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் ஹிந்தியில் செம ஹிட்டடித்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக ‘அந்தகன் ‘என்ற பெயரிடப்பட்ட படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

மேலும் படிக்க: விவாகரத்தே ஒரு நாடகம்.. ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..!

அந்தகன் படம் வருகிற  ஆகஸ்ட் 15 2024 வெளியாகிறது. தங்கலான் திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் வெளியாக உள்ளது. பிரசாந்த் மற்றும் விக்ரம் இருவருமே நெருங்கிய குடும்ப உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் நேருக்கு நேர் மோத இருப்பதால் குடும்பங்களுக்குள்ளேயே போட்டியா என்று பலரும் கூறி வருகிறார்கள்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!