முகநூலில் விளம்பரம்.. ஆடிட்டரை காரில் கடத்தி ₹10 லட்சம் ஆட்டையை போட்ட கும்பல் : தலைமறைவான பெண்..!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 1:00 pm

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் போஸ் எபினேசர் என்பவரின் மகன் வின்சி லாசரஸ் போஸ் (48 ). ஆடிட்டிங் செய்து வருகிறார் .

கடந்த மாதம் வின்சி லாசரஸ் போஸ் தனது முகநூல் பக்கத்தில் ஹோட்டல்கள் லீசுக்கு தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இதைப் பார்த்து பிருந்தா என்பவர் தொடர்பு கொண்டார். அவர் தேனி மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஹோட்டல் ஒன்று லீசுக்கு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

தொடர்ந்து பின்சி லா சரஸ் போஸ் அது குறித்த விபரங்களை கேட்டு அறிந்து உள்ளார். அப்போது பிருந்தா 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டு வருமாறு கூறி இருக்கிறார்.

தொடர்ந்து நேற்று முன் தினம் பின்சி லாசரஸ் போஸ் 10 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்து இருப்பதாக பிருந்தாவிடம் கூறினார் .உடனே பிருந்தா தனது நண்பர்கள் உடன் காரில் வருமாறு கூறியிருக்கிறார். காரில் வந்த மூன்று நபர்களுடன் பின்சி லாசரஸ் போஸ் பணத்துடன் புறப்பட்டு சென்றார்.

ஜீவா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தின் அருகே காரை நிறுத்திய அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பென்ஸி லாசரஸ் போஸ் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டனர்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4¼ பவுன் தங்கச் செயினையும் பறித்துக் கொண்டு பீன்ஸி லாசரஸ் போசை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவர்கள் காருடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸ் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மகன் விஷ்ணு ( 38 ), மணி என்பவரின் மகன் அஸ்வின் (29) கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ஜின்சன் (37) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் தலைமறைவாக உள்ள பிருந்தாவை போலீசார் தேடி வருகின்றனர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணம் 4¼ பவுன் தங்கச் செயின், மூன்று செல்போன்கள் , கத்தி , ஆடிட்டரை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 246

    0

    0