எவ்ளோ பெரிய ஜீனியஸ் டைரக்டரா இருந்தாலும் இதை பண்ண முடியாதேப்பா.. சாதித்து காட்டிய தனுஷ்..!
Author: Vignesh20 July 2024, 3:43 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.
மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!
தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் பெரிதும் எதிர்பார்ப்பில் முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், தேர்தல் நடைபெற்றதால், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதிக்கு திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில், வெற்றிமாறனுடன் பல படங்களில் வேலை பார்த்த தனுஷ் இந்த படத்தை ராவாக எடுத்துள்ளதாக படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு இரண்டரை மணி நேர படத்தில் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள கீ பாயின்ட்களை வைத்து ஒரு படமாக கொடுக்க முடியுமா என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை தனுஷ் அசால்ட் ஆக செய்து காட்டியுள்ளார். ராயன் படம் வெளியானதும், ரசிகர்கள் தனுஷ் என்ன மாதிரியான டைரக்டர் என்பதை புரிந்து கொள்வார்கள் என சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்ஜே சூர்யா பேசியிருந்தார். முன்னதாக இந்த படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தாலும் பரவாயில்லை வாங்குங்கள் என்று கலாநிதி மாறன் சொல்லும் அளவுக்கு படம் தாறுமாறாக இருப்பதாக கூறி வருகின்றனர்.