சினிமா பிரபலங்களை குறித்து அடிக்கடி விமர்சனங்களை செய்பவர் பயில்வான் ரங்கநாதன்.இதனால் இவர் மீது நிறைய பிரபலங்களுக்கு அதிருப்தியும் ஏற்படுவது உண்டு.ஆனாலும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் நகுல் நடிப்பில் வெளியாக இருக்கும் வாஸ்கோடகாமா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இந்த விழாவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்பவர்களை திட்டாதீர்கள் இது என்னுடைய எச்சரிக்கை கூட.இந்தியன் 2 படம் நல்லா இல்ல அப்படின்னா அது நல்லா இல்ல தான்.அதற்காக நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல முடியுமா? படம் நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல போறோம் என்று பேசினார். விமர்சனம் என்பது பட்டை தீட்டும் வைரம் போன்றது அது நம்மை மெருகேற்றிக் கொள்ள அது உதவுகிறது அதனால் விமர்சனம் செய்பவர்களை திட்டாதீர்கள். நடிகர் ஜெகனைப் பார்த்து கமெண்ட் போடாதீங்க அப்படின்னு சொல்லாதீங்க ஜெகன்.கமெண்ட் போடட்டும் அப்பதான் நம்மைப் பற்றி நமக்கே தெரியும் என்று பேசினார்.
அவரின் இந்த பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.