புனித நூல்களை அவமதிக்கிறது கல்கி; வழக்கு தொடர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர்;சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

Author: Sudha
21 ஜூலை 2024, 10:28 காலை
Quick Share

சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கமலஹாசன் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’ ஜூன் 27 இல் பான் இந்தியா திரைப்படமாக வெளியான கல்கி திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தற்போது படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், பேசும் போது கல்கி 2898 AD திரைப்படம் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியா உணர்வுகள், நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. அதன் பாரம்பரியத்தை சிதைக்கக் கூடாது. மதத்தின் வேதங்களை மாற்றக்கூடாது. கல்கி நாராயணன் நம் நம்பிக்கையின் மையத்தில் இருக்கிறார். இவர் விஷ்ணுவின் இறுதி அவதாரமாகக் கருதப்படுகிறார். புராணங்களில் கல்கியின் அவதாரம் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது,

இந்த படம் நமது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சொல்கிறது. இந்தப் படம் நமது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. ஹிந்துக்களின் உணர்வுகளோடு விளையாடுவது சினிமாக்காரர்களுக்கு ஒரு பொழுது போக்காகிவிட்டது. துறவிகள் பேய்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எங்கள் நம்பிக்கையுடன் விளையாடுவது என்று அர்த்தமல்ல” என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் மேலும் கூறினார்.

ஆச்சார்யா பிரமோத் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் உஜ்வல் ஆனந்த் சர்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீபஸில்“உங்கள் திரைப்படம் கல்கியைப் பற்றிய அடிப்படைக் கருத்தை மாற்றியுள்ளது, இந்து புராண நூல்களில் எழுதப்பட்ட மற்றும் விளக்கப்பட்ட காரணங்களுடன், கல்கி திரைப்பட கதை ஒத்துப்போகவில்லை.இது புனித நூல்களை அப்பட்டமாக அவமதிக்கும் வகையில் உள்ளது. “அத்தகைய சித்தரிப்பு ஏற்கனவே குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது இது இந்து மதத்தின் தவறான புரிதலுக்கும், தவறான விளக்கத்திற்கும், அடுத்தடுத்து சிதைவதற்கும் வழிவகுக்கும்,மேலும் மத உணர்வுகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பாலிவுட் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 104

    0

    0