வேறு ஒரு ஹீரோவுக்கு சொல்லப்பட்ட கதை; நடிக்க இருக்கும் முன்னணி ஹீரோ; லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
Author: Sudha21 July 2024, 2:19 pm
தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் விஜய். கோட் திரைப்படத்தை பற்றி இனி நிறைய அப்டேட்கள் வரும் என பிரசாந்த் தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் தன்னுடைய 69 வது படத்துடன் திரை உலகிலிருந்து விலகி அரசியலில் முழு ஆர்வம் காட்ட இருப்பதாக சொல்லி இருக்கிறார் விஜய். அதனால் அவருடைய கடைசி படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி உள்ளதும்.நடிகர் விஜய், அடுத்தபடியாக எச்.வினோத் இயக்கும் தன்னுடைய 69 வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, கமலின் 233வது படத்தை இயக்குவதாக இருந்த எச்.வினோத் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளையும் முடித்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த படம் டிராப் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கமலின் 233 வது படத்திற்காக தான் தயார் செய்த அதே கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம் எச்.வினோத். எனவே விஜயின் 69 வாது கதை கமலுக்காக தயார் செய்த கதையாம்.என்றாலும் விஜய்க்காக அந்த கதையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.