இளையராஜா பயோ பிக் ; டாப் நடிகர் கொடுத்த ஐடியா; ஓகே சொன்ன இளையராஜா,..

Author: Sudha
21 July 2024, 2:56 pm

உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா எந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். இந்நிலையில் இளையராஜா தன் வாழ்வில் கடந்து வந்த பாதை குறித்து ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அவருடைய பயோ பிக் தயாராகி வருகிறது.

இளையராஜாவின் இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வரவிருக்கிறது.இதற்கிடையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் இளையராஜாவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். . அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.

இளையராஜாவின் திரைப்பயணம் அவர் கடந்து வந்த பாதை அவர் மேல் உள்ள சர்ச்சைகள் என எல்லாவற்றையும் பற்றி இந்தப்படம் பேசும் என சொல்லப்படுகிறது.

எனவே இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்கலாம் என தனுஷ் சொன்னதாகவும் அதற்கு இளையராஜா ஓகே சொல்லிவிட்டதாகவும் திரை வட்டாரம் சொல்கிறது.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்