இயக்குநர் சூர்யா மனோஜ் வங்கலா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான பிருந்தா என்கிற இணையத் தொடரில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் நடிகை திரிஷா.சமீப காலமாக திரிஷா நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தற்போது இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இத்தொடரில், த்ரிஷா காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.திரிஷாவை போலீஸ் அதிகாரியாக காண இப்போதே ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.