நடிக்கத் தெரியாத நடிகர்; பிரபல நடிகர் குறித்து கருத்து சொன்ன எஸ் வி சேகர்,.
Author: Sudha21 July 2024, 5:32 pm
எஸ் வி சேகர் தமிழ் சினிமாவின் 80 களில் நிறையத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள் சிலர், கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தன்னுடைய “பெரியதம்பி” நாடகத்தை அமெரிக்காவின் நியூஜெர்சியிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தி உள்ளார்.
இன்று நடிகர் சிவாஜியின் நினைவு தினத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய பின் மீடியாவுக்கு பேட்டி அளித்தார் எஸ் வி சேகர்.

அந்த பேட்டியில் நடிகர் சிவாஜி கணேசன் நடிக்காத கதாபாத்திரமே இல்லை. நடிகர் திலகம் அவர். திரைப்படங்களில் நடித்து மக்களை கவந்தாலும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நடிகர் அவர் என்று குறிப்பிட்டார்.