உங்க தொப்பியில் உள்ள மூன்று சிங்கங்களுக்கு அர்த்தம் தெரியுமா? காவல்துறையிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 12:12 pm

ஆந்திரா சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலரை தெலுங்கு தேசம் கட்சியினர் படுகொலை செய்த நிலையில் மேலும் சிலரை பயங்கரமாக தாக்கிய தெலுங்கு தேச கட்சியினர் அவர்களை படுகாயம் அடைய செய்துவிட்டனர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து நூற்றுக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

எனவே ஆந்திராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கருப்பு துண்டு அணிந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சி எம்எல்ஏக்கள் வந்தனர்.

மேலும் அவர்களுடைய கைகளில் ஆளும் கட்சி மற்றும் ஆந்திர மாநில அரசு ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

சட்டமன்ற நுழைவாயிலில் பணியில் இருந்த போலீசார் அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினார்.

அப்போது போலீஸ் அதிகாரியான மதுசூதன் ராவ் என்பவர் சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை பறித்து கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி அவரை பார்த்த மதுசூதன் ராவ், நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நாம் மக்களாட்சியில் இருக்கிறோம்.

உன் தலையில் நீ அணிந்திருக்கும் தொப்பியில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சிங்களுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? அதன் அர்த்தம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது அல்ல, பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டவே அந்த சின்னம் உன்னுடைய தொப்பியில் பொருத்தப்பட்டுள்ளது என்று பயங்கர ஆவேசமாக கூறினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 164

    0

    0