சானியா மிர்சாவுடன் 2-ம் திருமணம்?.. மௌனம் களைத்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

Author: Vignesh
23 July 2024, 10:01 am

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இருபெரும் விளையாட்டு பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது.

ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 124 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். நடப்பு டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக்கை எடுக்காதது கூட சர்ச்சையானது.

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. 6 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர் சானியா மிர்சா. இந்திய விளையாட்டின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷோயப் மாலிக்கை திருமணம் செய்தது பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது. ஷோயப் மாலிக் – சானியா மிர்சா ஜோடிக்கு இஷான் என்ற ஆண் குழந்தை உள்ளது. 2018ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

சமீபத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் நிலையில், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று தகவல்கள் கூட வந்தது. இதற்கு இடையில், அந்த புகைப்படம் மார்னிங் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

இருப்பினும் முகமது ஷமி திருமணம் செய்தி சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவியது. இந்த நிலையில், இது குறித்து பேசிய முகமது ஷமி சமூக வலைதளங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இப்படி பொய்யான செய்திகளை பரப்புவதற்கு பதிலாக வாழ்க்கையில் வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் ஒரு நல்ல மனிதர் என நான் நம்புகிறேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 139

    0

    0