தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு; எல்லோர் கையிலும் இனி மொபைல்; பட்ஜெட்டில் சொல்லப்பட்டது என்ன?

Author: Sudha
23 July 2024, 1:10 pm

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, மொபைல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டு உள்ளது.

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 % ல் இருந்து 6 % ஆக குறைப்பு

பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 % ஆகவும்

25 முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்ய சங்கவரி செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மூன்று புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

மற்றும் மொபைல்போன் உதிரி பாகங்கள், சார்ஜர்கள், மீதான சுங்க வரி 18% இல் இருந்து 15 % ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தங்கம் வெள்ளி பிளாட்டினம் போன்ற உலோகங்களின் விலையில் மாற்றம் வருமா என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…