அமெரிக்கர்கள் பிற்போக்குத் தனமானவர்கள்; எம் பி நடிகையின் அதிர வைத்த பதிவு…

Author: Sudha
23 July 2024, 2:14 pm

நடிகையும் -அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், சமூக வலைதளத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீதான மீம்ஸ்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவினை போட்டிருந்தார். அதில் அமெரிக்கர்கள் இந்தியர்களை விட. பிற்போக்குத் தனமானவர்கள் மற்றும் மோசமானவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் குறித்த பெரும்பாலான மீம்ஸ்கள் கமலா ஹாரிஸும், முன்னாள் சான் பிரான்சிஸ்கோ மேயர் வில்லி பிரவுனும் 1990 காலத்தில் காதல் உறவிலிருந்ததாகவும், கமலா ஹாரிஸ் 29 வயதாக இருக்கும்போதே 60 வயதிருக்கும் மேயர் வில்லி பிரவுனுடன் பழகி வந்ததாகவும் குறிப்பிட்டு ஏகப்பட்ட மீம்ஸ்களை வைரல் செய்து வந்தனர். இந்நிலையில் கமலா ஹாரிஸ் பற்றிய இதுபோன்ற வதந்தியான மீம்களுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும், பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா இது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கவில்லை. இருப்பினும் மதிக்கத்தக்க ஒரு பெண் தலைவரை இப்படி கீழ்த்தரமாகப் பேசுவதை, ட்ரோல் செய்வதையும் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நவீன நாடுகளில் பிற்போக்குத்தனங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, அதற்கு இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.

இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்கள்” என்று பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தனது கண்டத்தைத் தெரிவித்திருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 133

    0

    0