திருப்பூரை விட்டு வேறு மாநிலம் செல்லும் ஜவுளித்துறை.. திமுகவை எச்சரிக்கும் அதிமுக எம்எல்ஏ!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஜூலை 2024, 2:29 மணி
poll
Quick Share

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட்… ஒதுக்கப்பட்ட தமிழகம்? நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் அமளி!!

இதைத்தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக அரசின் நியாய விலை கடைகளில் அரிசி பருப்பு, பாமாயில் உள்ளிட்டவைகள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் கோழி தீவனத்துக்கு கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு தரம் குறைவாக உள்ளதாகவும், உடனடியாக நல்ல அரிசிகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் மின் கட்டணம் உயர்வால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பல வேலைவாய்ப்பு இழந்து சொந்த ஊருக்கு செல்வதாகவும், மேலும் சில தொழில்துறையினர் தொழிலை விட்டு விலகியதாகவும் இந்த நிலை நீடித்தால் விரைவில் திருப்பூரை விட்டு ஜவுளித்துறை வேறு மாநிலத்துக்கு சென்று விடும் எனவே உடனடியாக மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், திமுகவில் பல தலைவர்கள் மற்றும் கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி வழங்க வேண்டும் அதை விட்டுவிட்டு வாரிசு அரசியல் செய்து வந்தால் திமுக அழிந்துவிடும் என்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேட்டி அளித்தார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 197

    0

    0