காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பூட்டு.. கொடியை அகற்றிய தமாகா : வெடித்த போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2024, 6:56 pm

பழனி ரயில் நிலைய சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவராக இருந்த சுந்தர் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். சுந்தர் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.

மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை அகற்றிவிட்டு காங்கிரஸ் கொடியை ஏற்றினர். இந்தநிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் பற்றி வருவாய் துறையின் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கட்சி அலுவலகத்தில் இருந்த இரண்டு தரப்பினரையும் வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை பூட்டினர். வருவாய்த் துறை அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி யாரிடம் ஆவணம் உள்ளதோ அவருக்கு கட்சி அலுவலகம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டுச் சென்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 463

    0

    0