வறுமையில் வீழ்ந்த இயக்குனர் குடும்பம்; கை கொடுத்துத் தூக்கிய பிரபல தமிழ் ஹீரோ; கோலிவுட் லேட்டஸ்ட் டாக்

Author: Sudha
24 July 2024, 1:22 pm

பூமகள் ஊர்வலம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குனர் ராசு மதுரவன். இவர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ராசு மதுரவன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ராசு மதுரவன் தன்னுடைய 44 வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள்.இவருடைய மனைவி பவானி சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.அதில் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப் படுவதாகவும் குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும் சொல்லியிருந்தார்.

இந்த நேர்காணலைக் கண்ட நடிகர் சிவகார்த்திகேயன், பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வருடத்திற்கான பள்ளிக் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் இனி வரும் வருடங்களிலும் பிள்ளைகளின் பள்ளிப் படிப்பிற்கான செலவை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்துக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.இந்த விஷயம் திரையுலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 168

    0

    0