அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.. பிரபல நடிகையிடம் மேடையில் பகிரங்கமாக பேசிய மாதவன்..! (Video)
Author: Vignesh24 July 2024, 1:11 pm
90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு சமயத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது, உச்ச நடிகராக இருக்கிறார்.
முன்னதாக, மாதவன் ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில், மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய காவ்யா மாதவனும் கலந்து கொண்டார். அப்போது, காவ்யா மாதவன் தனக்கு விருது வழங்கிய மாதவன் குறித்து அந்த மேடையில் பேசியிருந்தார். அதில், நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் மாதவன் முன்னணி நடிகராக இருந்தார். நான் ஷூட்டிங் காக ஊட்டி வந்த சமயத்தில் மக்கள் என்னை வந்து பார்த்து சென்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மேலும் படிக்க: எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!
என்னுடன் நடித்த ஜெயசூர்யா அங்கிருந்த மக்களிடம் என்னை மாதவனின் மனைவி என்று சொல்லி வைத்திருக்கிறார். அதனால், தான் மக்கள் என்னை பார்க்க வந்தார்கள் என்று காவியா மாதவன் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த மாதவன் நோ ப்ராப்ளம் என்னுடைய படத்தின் ஒரு வசனம் இருக்கிறது. அது என்னவென்று அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்பதுதான் என மாதவன் தெரிவித்திருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
என்ன இருந்தாலும் மேடையில் மாதவன் இப்படி பேசி இருக்க கூடாது தானே pic.twitter.com/igAtYrW0sc
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 23, 2024