அஜித் தான் நான் சினிமாவுக்கு வரக் காரணம்; அவர் இல்லைனா நான் இல்ல; உண்மையை போட்டுடைத்த டாப் ஹீரோ..!!

Author: Sudha
24 July 2024, 2:39 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் .நிகழ்ச்சியில் அவர் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியாளர் ஒருவரிடம் தன்னுடைய சினிமா என்ட்ரி குறித்துப் பேசும் போது தன்னுடைய முதல் திரைப்படமான நேருக்கு நேர் வாய்ப்பு வந்தததற்கு காரணம் நடிகர் அஜித் என்று சொன்னார்.

நேருக்கு நேர் படத்தில் நடிக்க முதலில் நடிகர் அஜித் அவர்களை புக் செய்ததாகவும் அவர் சில நாட்கள் ஷூட்டிங் நடந்ததாகவும் பிறகு அஜித் விலகி விட்டதால் அந்த வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நடிகர் அஜித் விட்டுக் கொடுத்த வாய்ப்பே தான் சினிமாத் துறைக்கு வரக் காரணம் அந்த நன்றி உணர்வு எப்போதும் எனக்கு உண்டு என்று சொன்னார்.

நடிகர் அஜித்தால் தான் இன்று நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் பேசிய காணொளி இப்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…