இந்த நடிகர் இளைஞர்களைக் கெடுக்கிறார்; பயமாக இருக்கிறது; போட்டுத் தாக்கிய பிரபல பத்திரிக்கையாளர்,..

Author: Sudha
24 July 2024, 3:32 pm

முன்னணி நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்துவருகிறார் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ராயன்.

தனுஷின் ராயன் திரைப்படம் குறித்து பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “நடிகர் தனுஷின் சமீபத்திய படங்கள் அனைத்திலும் கத்தி, ரத்தம் அதிகமாக இருக்கிறது. தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு அது மிகப்பெரிய பேரழிவு. இந்தக் கால இளைஞர்கள் திரைப்படங்களில் இருக்கும் நடிகர் நடிகைகளைப் பார்த்துதான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் நடிகர் தனுஷோ, தன்னுடைய திரைப்படங்களில் அவனை போடு, இவனைப் போடு, செஞ்சிடுவேன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

இளைஞர்களும் இந்த வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.ஒருவரைக் கொலை செய்வது பலருக்கும் இப்போது சாதாரணமான விஷயமாக மாறி விட்டது. வடசென்னை, அசுரன், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் ஆக்‌ஷன் நிறைந்த படங்களாக வெளியானது இந்தத் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்காக வன்முறையை ஒரு ஃபார்முலாவாகவே தனுஷ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்த படங்களிலும் அந்த பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்.ஆனால் அப்படிப்பட்ட படங்கள் இளைய தலைமுறையினருக்கு ஆபத்து என்பதை இன்றைய இளைஞர்கள் உணர மறுக்கிறார்கள் என குறிப்பிட்டார்

  • Madha Gaja Raja movie review பொங்கல் ரேஸில்”மதகதராஜா”வெற்றி நடையா…கலக்கலான கமெண்ட்களை அள்ளி விடும் ரசிகர்கள்..!