மீண்டும் மிரட்ட வரும் ஆஸ்கார் நாயகன்; வெளியான ஜோக்கர் 2 டிரெய்லர்,..

Author: Sudha
24 July 2024, 5:12 pm

இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘ஜோக்கர்’.

ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்)கதையின் ஹீரோ மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கலைஞன்.அந்த கலைஞனை ஒரு கட்டத்தில் குடும்பமும் சமூகமும் எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அட்டகாசமான திரைக்கதையால் சொன்ன படம்தான் ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலமானது அனைவரையும் பயமுறுத்தும் உள்நோக்கம் கொண்ட சிரிப்பாக அது இருக்கும்.

ஜோக்கர் படத்தில் நாயகனாக நடித்து அசத்தியதற்காக ஜாக்குவன் பீனிக்ஸுக்கு சினிமாவின் உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

ஜோக்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் ஜோக்கர் 2 டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!