அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து.. வியாபாரி மீது மோதி நிறுத்திய ஓட்டுநர் : பெரும் விபத்து தவிர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2024, 10:41 am
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய வேலூர் டு கன்னியாகுமரி வரை செல்லும் சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சிக்னல் விழுந்து உள்ளது அப்போது பேருந்தை நிறுத்த முழன்ற போது திடீரென பிரேக் பிடிக்காததால் வாகனம் நிற்காமல் சென்றுள்ளது, அப்போது அதை சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் இடது புறம் உள்ள தெருவில் திருப்பி உள்ளார்.
அப்போது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த காலேஷா 36 இவர் இருசக்கர வாகனத்தில் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார் அவர் ஓய்வுக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மேல் மோதி வாகனத்தில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அலுமினிய சாமான்கள் நசுங்கி சேதம் ஏற்பட்டது வாகனத்தின் மேல் அமர்ந்திருந்த காலேஷா வலது கையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சிறுகாயங்களுடன் எந்த ஒரு அசம்பாவிதம் இன்றி பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது
முக்கிய பிரதான சாலையில் அரசு பேருந்து பிரேக் டவுனால் சாலையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அங்கு இருந்த காவல்துறையினர் உடனடியாக போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்
மேலும் படிக்க: ஜெயக்குமார் வழக்கில் மீண்டும் திருப்பம்.. சபாநாயகர் அப்பாவுக்கு சிக்கல் : வேகமெடுக்கும் சிபிசிஐடி விசாரணை!
பின்பு இந்த விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.