கார்கில் போர் வெற்றி தினம் 25 ஆண்டுகள் நிறைவு; நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர்,..!

Author: Sudha
26 July 2024, 12:48 pm

25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.கார்கிலில் இந்த போர் நடந்தது.கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 25 ஆண்டு வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று காலை கார்கில் வந்தார். டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். டிரசில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?