“கூப்பிட்டு கன்னத்தில் பளார் விட்டார்”… அஜித் குறித்து பிரபல காமெடி நடிகை பரபரப்பு பேட்டி!

Author:
27 July 2024, 3:17 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரராக இருந்து வருபவர் அஜித். பல நடிகர் நடிகைகள் அஜித்துடன் நடித்த அனுபவங்களை குறித்து பேட்டிகளில் கூறும்போது பல வியக்கத்தக்க விஷயங்ககளையும் பெருமையான பல விஷயங்களும் கூறி அவரை பெருமைப்படுத்துவார்கள்.

குறிப்பாக அஜித் மிகச் சிறந்த மனிதர், யாருக்கும் தெரியாத வகையில் எனக்கு இந்த உதவிகள் செய்திருக்கிறார். அஜித் மிகச்சிறந்த திறமைசாலி அவருக்கு நடிப்பையும் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் இருக்கிறது மற்றும் படப்பிடிப்புகளில் எங்களுக்கு பிரியாணி சமைத்து கொடுத்தார்.இப்படி பல பிரபலங்கள் அஜித்துடன் நடித்த அனுபவத்தை குறித்து பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், தற்போது யாரும் நம்ப முடியாத வகையில் அஜித்தா இப்படி செய்தார்? என கேட்கும் வகையில் பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து கூறியிருக்கும் விஷயம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி விழிபிதுங்க வைத்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்? என கேட்டீர்களானால்…..

“நான் அஜித்துடன் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித்தின் தீவிரமான ரசிகர் ஒருவர் அவருடைய தலையில் பெயரை பச்சை குத்திக்கொண்டு “தல தல” என்று ஓரமாக நின்று கொண்டு கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். அதை பார்த்து அஜித் அவரை அழைத்து எதுவுமே பேசாமல் கன்னத்தில் பளார் என ஒரு அடி விட்டார்.

பின்னர் அந்த ரசிகர்களிடம் காசு கொடுத்து போய் மொட்டை அடிச்சிட்டு வா என்று சொன்னார். அந்த ரசிகரும் மொட்டை அடிச்சிட்டு உடனடியாக வந்து அஜித் முன்பு நின்றதும் அவருடன் சேர்ந்து அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு இனி இப்படி எல்லாம் செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பினார். என்னதான் இருந்தாலும் அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே எப்படி ரசிகரை அடித்தாரா? என பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…